ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற ?சுவான்? டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகீத் கைது; 2 நாள் சி.பி.ஐ. காவல்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

புதுடெல்லி, பிப். 9- ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற ?சுவான்? டெலிகாம் நிறுவனத்தின் அதிபர் ஷாகீத் உஸ்மான் பல்வா நேற்று இரவு மும்பையில் திடீரென கைது செய்யப்பட்டார். இன்று அவரை மும்பை சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். விசாரணைக்காக தங்கள் காவலில் விடுமாறு சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி 2 நாள் சி.பி.ஐ. காவலுக்கு அனுமதித்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அதிகாரிகள் சந்தோலியா, பெகுரியா ஆகியோரை ஏற்கனவே சி.பி.ஐ. கைது செய்தது. அவர்களை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணை காலம் முடிந்ததை அடுத்து 3 பேரும் நேற்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களில் ஆ.ராசாவை மட்டும் மேலும் 2 நாள் காவலில் எடுத்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. மற்ற 2 அதிகாரிகளும், திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ஆ.ராசாவிடம் நேற்று இரவு தொடர்ந்து விசாரணை நடத்தியது. இன்றும் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற ?சுவான்? டெலிகாம் நிறுவனத்தின் அதிபர் ஷாகீத் உஸ்மான் பல்வா நேற்று இரவு மும்பையில் திடீரென கைது செய்யப்பட்டார். சுவான் நிறுவனம் ரூ.1,537 கோடி விலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்று இருந்தது. அதன் பின்னர் அந்த நிறுவனம் ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த எடிசலாட் என்ற நிறுவனத்துக்கு 45 சதவீத பங்கை ரூ.4,730 கோடிக்கு விற்றது. 55 சதவீத பங்கை தன்வசமே வைத்துக் கொண்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றதுமே சுவான் நிறுவனம் அதன் பெயரை டி.பி. டெலிகாம் என மாற்றிக்கொண்டது. எடிசலாட் நிறுவனத்துக்கு 45 சதவீத பங்கை விற்றதும் நிறுவனத்தின் பெயரை எடிசலாட்-டி.பி. என பெயர் மாற்றிக் கொண்டது. ரூ.1,537 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற அந்த நிறுவனம் 45 சதவீத பங்கை மட்டுமே விற்று ரூ.4,730 கோடி சம் பாதித்து விட்டது. எனவே தான் இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருக்கலாம் என கருதி சுவான் நிறுவனத்திடம் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது. அதில் தவறு நடந்து இருப்பதை உறுதி செய்ததை அடுத்து சுவான் நிறுவன அதிபர் ஷாகீத் உஸ்மான் பல்வானை சி.பி.ஐ நேற்று கைது செய்து இருக்கிறது. அவரிடம் நேற்று இரவு தீவிர விசாரணை நடந்தது. இன்று அவரை மும்பை சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் விசாரணைக்காக தங்கள் காவலில் விடுமாறு சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி 2 நாள் சி.பி.ஐ. காவலுக்கு அனுமதித்தார். இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவரை டெல்லி அழைத்து சென்று ஆ.ராசா முன்னிலையில் நேரடியாக விசாரிக்கவும் திட்டமிட்டு உள்ளனர். சுவான் நிறுவன அதிபர் கைதை தொடர்ந்து யுனிடெக் நிறுவன அதிபரையும் கைது செய்ய சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது. யுனிடெக் நிறுவனம் ரூ.1,661 கோடி விலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்று இருந்தது. பின்னர் இந்த நிறுவனம் தனது 60 சதவீத பங்கை டெலினார் நிறுவனத்துக்கு ரூ.6,200 கோடிக்கு விற்றது. அதாவது 60 சதவீத பங்கை மட்டுமே விற்று 4 மடங்கு லாபம் பெற்று விட்டது. எனவே இதிலும் முறைகேடு நடந்து இருக்கிறது என சி.பி.ஐ. நம்புகிறது. இதனால் இந்த நிறுவனத்தின் அதிபரையும் கைது செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதே போல மேலும் பல தொழில் அதிபர்களும், அதிகாரிகளும் அடுத்தடுத்து கைதாவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் தொடர்பாக இதுவரை நடந்த விசாரணை விவரங்களை நாளை சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான அறிக்கை தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.