தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. கிளை செயலாளர் நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக்கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளம் ஒன்றியத்தைச் சேர்ந்த எஸ்.பாலசுந்தர் (தட்டார்மடம் கிளைக் கழகச் செயலாளர், நடுவகுறிச்சி ஊராட்சி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன் பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.