காமெடி நடிகர் வடிவேலு மகன் திருமணம் கலாட்டா கல்யாணமாக நடந்தது.

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

காமெடி நடிகர் வடிவேலு மகன் திருமணம் கலாட்டா கல்யாணமாக நடந்தது. மணப் பெண்ணுக்கு திருமண வயது வரவில்லை என்று புகார் வந்ததால் மண்டபத்தில் போலீசாரும், அதிகாரிகளும் புகுந்து விசாரணை நடத்தினார்கள். வடிவேலுக்கு கன்னிகா பரமேஸ்வரி, கார்த்திகா, கலைவாணி ஆகிய மகள் களும் வி.சுப்பிரமணி என்ற மகனும் உள்ளனர். சுப்பிரமணிக்கும் திருப்பு வனத்தை சேர்ந்த கல்லூரி மாணவி வி.புவ னேஸ்வரிக்கும் திருமணம் நிச்சயமானது. இவர்கள் திருமணம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று நடந்தது இந்த திருமணத்துக்கு நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் யாரும் அழைக்கப்படவில்லை. வடிவேலுவின் சொந்த ஊரான ஐரா நல்லூர் ஊரைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். வடிவேலு தாயார் சரோஜினி அம்மாள், இரண்டு அக்காள்கள், மூன்று தம்பிகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் குடும்பத்துடன் வந்து இருந்தனர். அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் யாரையும் பார்க்க முடியவில்லை. திருமணம் ரகசியமாக இருந்தது. மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து மண்டபம் வெளியே பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றிலும் வடிவேலு படமோ, பெயரோ இடம் பெறவில்லை. 1000 இருக் கைகள் மட்டுமே கொண்ட அந்த மண்டபத்தில் நிறைய இருக்கைகள் காலியாக இருந்தன. மதுரையின் மைய பகுதியில் நடந்த இந்த திருமணம் வடிவேலு இல்ல திருமணம் என்று யாருக்கும் தெரியவில்லை. சினிமா துறையில் இருந்து வடிவேலு கதாநாயகனாக நடித்த தெனாலி ராமன் படத்தை இயக்கிய யுவராஜ் மற்றும் பூச்சி முருகன் இவர்கள் மட்டுமே வந்து இருந்தனர். திருமணம் எளிமையாக நடந்தது. இந்த நிலையில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் தல்லாகுளம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் திருமண மண்டபத்திற்குள் திடீரென புகுந்தனர். இதனால் பரபரப்பு- ஏற்பட்டது. அவர்கள் மணமகள் புவ னேஸ்வரி யிடம் விசாரணை நடத்தினர். புவனேஸ்வரி மைனர் பெண் என்றும், பணத்துக் காக அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி இந்த திருமணத்தை நடத்துவ தாக வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப் பட்டது என்று கூறப்பட்டது. விசாரணைக்கு ஒத்துழைத்த நடிகர் வடிவேலு சிவகங்கை மாவட்ட கல்வி அதிகாரியை தொடர்பு கொண்டு திருப்புவனம் பள்ளியில் புவனேஸ்வரியின் சான்றி தழை ஆய்வு செய்யும் படி கேட்டார். அப்போது புவனேஸ்வரிக்கு 18 வயது பூர்த்தியாகி 7 மாதங்கள் ஆகிவிட்டன என்பது உறுதி செய்யப்பட்டது. யாரோ உள்நோக்கத்துடன் புகார் செய்திருப்பதாக போலீ சாரிடம் நடிகர் வடிவேலு தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.