உலகக் கோப்பை வென்ற பார்வையற்றோர் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் மோடி பாராட்டு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. தாயகம் திரும்பிய வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி தனது அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து பாராட்டிப் பேசினார். 4வது பார்வையற்றோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. இதில் இறுதிப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. கேப்டவுனில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் 40 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 389 ரன்களைக் குவித்திருந்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 39.4 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 392 ரன்களைக் குவித்து வெற்றி கண்டது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. கோப்பையுடன் தாயகம் திரும்பிய அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் நேரில் வந்திருந்து வீரர்களை வரவேற்றார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.