சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 64வது பிறந்த நாள்... தலைவர்கள், கலைஞர்கள் வாழ்த்து!

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

இந்திய சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்சார் எனப் புகழப்படும் ரஜினிக்கு இன்று 64வது பிறந்த நாள். இந்தப் பிறந்த நாளில் அவரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி, தமிழகத்தின் பெரும்பான்மை அரசியல் தலைவர்கள், இந்திய சினிமா கலைஞர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இன்று வெளியாகும் அவரது லிங்கா படம் பெரும் வெற்றியடை வாழ்த்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஜினிக்கு ட்விட்டரிலும் தொலைபேசி மூலமாகவும் வாழ்த்து தெரிவித்துள்ளார் பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் போன்றோரும் ரஜினிக்கு போன் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் மு கருணாநிதி, பொருளாளர் முக ஸ்டாலின், கருணாநிதியின் மூத்த மகன் முக அழகிரி ஆகியோர் ரஜினிக்கு போன் மூலம் வாழ்த்து கூறினர். காங்கிரஸ் தலைவர்கள் ப சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன், ஜி கே வாசன் போன்றோர் தங்கள் வாழ்த்துகளை ரஜினிக்கு தெரிவித்துள்ளனர். ரஜினிக்கு வாழ்த்து சொல்லாத திரையுலக பிரபலமே இல்லை என்னும் அளவுக்கு அவரவர் தங்களுக்குத் தெரிந்த வழியில் வாழ்த்து கூறி வருகின்றனர். கமல் ஹாஸன் வீடியோ மூலம் வாழ்த்துச் சொன்னார். இன்று வெளியான பெரும்பாலான சினிமா விளம்பரங்களில் ரஜினியின் படத்தைப் போட்டு, பிறந்த நாள் வாழ்த்துக் கூறியுள்ளனர் பல தயாரிப்பாளர்களும். இயக்குநர்கள், சக நடிகர்கள் என தமிழ் சினிமாவே நேற்று மாலையிலிருந்து ரஜினிக்கு வாழ்த்துக் கூறி வருகிறது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சமூக வலைத் தளங்களில் தானும் ரஜினியும் உள்ள படங்களை வெளியிட்டு, இந்திய சினிமாவின் போக்கையே மாற்றிய சாதனையாளர் ரஜினிக்கு வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.