தி.மு.க. தான் என்றும் என் கட்சி, கட்சியிலிருந்து விலகல் என்பது என்றும் நடக்காது. துரைமுருகன் அறிக்கை

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

இன்று காலை துரைமுருகன் தன் கட்சித் பதவியில் இருந்து விலகி விட்டதாக செய்திகள் வெளியானது. இது பற்றி ஏராளமானவர்கள் துரைமுருகனை தொடர்பு கொண்டு கேட்டனர். இதையடுத்து துரைமுருகன் இன்று காலை மறுப்பு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- தி.மு.க.வின், துணைப் பொதுச் செயலாளர் பதவியை நான் ராஜினாமா செய்து விட்டதாக-தவறான- ஜமக்காளத்தில் வடிகட்டிய ஒரு பொய்யை, ஒரு செய்தியாக ஆக்கி சில பத்திரிகைகள் பெரிதாக வெளியிட்டிருப் பதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். நேற்று நான் வேலூருக்குச் சென்று, நாளைக்கு எங்கள் மாவட்டத்தில் யார் யார் என்ன பதவிக்கு விண்ணப் பிப்பது என்பதைக் கழகத் தோழர்களோடு விவாதித்து ஒழுங்கு செய்து கொண்டிருந்த போதே சில பத்திரிகை நிருபர்கள் தொலைபேசியில் என்னோடு தொடர்பு கொண்டு இப்படியரு செய்தி உலவுகிறதே என்று கேட்ட போது அதைத் திட்டவட்டமாக மறுத்து பதிலளித்தேன். நேற்றிரவு சுமார் 10 மணி அளவுக்கு சென்னைக்குத் திரும்பிய போது என் வீட்டு வாசலிலே நின்றிருந்த சில தொலைக்காட்சியினரிடமும் இது அப்பட்டமான பொய்; யாரோ சில விஷமிகள் இதைத் திட்டமிட்டு பரப்பி யிருக்கிறார்கள் என்று பேட்டி கொடுத்தேன். ஆனால் இன்று காலையில் எந்தெந்த பத்திரிகை நிருபர் கள் என்னோடு பேசினார் களோ, அதே பத்திரிகைகளில் நான் துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக செய்தி வெளியிட்டிருப்பது கண்டு, தமிழ்நாட்டில் நிலவும் பத்திரிகா தர்மத்தை என்ன சொல்வது? நான் முறையாக கட்சியில் வளர்ந்தவன். நிறை வாழ்க்கையோடு வாழ்ந்து வருபவன். 1954ஆம் ஆண்டிலிருந்து கட்சியில் உறுப்பினராக இருப்பவன். 50 ஆண்டுகளாக தலைவர் கலைஞரின் அடியற்றி நிற்பவன். கழகத்தின் மீது அடித்த எந்தப் புயலிலும் காணாமல் போகாமல் இருப்பவன். நான் வெறும் அரசியல் வாதி அல்ல; திராவிட இயக்கத்தின் கொள்கையின் மீது பற்று கொண்டவன். இப்படிப்பட்ட என் மீது நான் செய்யாத ஒன்றை செய்து விட்டதாகக் கற்பனை யில் ஒரு செய்தியை உருவாக்கி நான் விளக்கம் தந்த பிறகும், பத்திரிகைகள் வெளியிட்டிருப்பதை வன்மையாகக் கண்டிருக் கிறேன். தி.மு.க. தான் என்றும் என் கட்சி, தலைவர் கலைஞர் தான் என்றும் என் தலைவர் தளபதி ஸ்டாலின் எங்கள் வழிகாட்டி இது தான் என் முடிவு! கட்சியிலிருந்து விலகல் என்பது என்றும் நடக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் துரைமுருகன் கூறியுள்ளா
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.