லிங்கா படுதோல்வி? ரஜினியை கலாய்க்கும் விஜய் அசிகர்கள்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சூப்பர்ஸ்டார் நடித்த 'லிங்கா' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. ஒருசில பத்திரிகைகள் லிங்கா படம் படுசுமாராக இருப்பதாக விமர்சனம் எழுதியுள்ளதால் ரஜினிக்கு எதிராக மீண்டும் கர்நாடகக்காரர் என்ற குரல் எழுந்துள்ளது. குறிப்பாக அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் தங்கள் தலைவருக்கே என்று கூறிக்கொண்டே வரும் விஜய்யின் ரசிகர்கள் ரஜினியை மிக மோசமாக ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் கலாய்க்கும்படி விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு ரஜினி ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருவதால் டுவிட்டரில் கடும் விமர்சனப்போர் நடந்து வருகிறது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் கருத்து கூறும்போது 12 நாளில் ரூ.100 கோடி வசூலித்தவர் எல்லாம் சூப்பர்ஸ்டார் கிடையாது. ஒரே நாளில் ரூ.300 கோடி சம்பாதிக்கும் படம் எங்கள் சூப்பர்ஸ்டார் படம்தான் என்று கூறியுள்ளார். ரஜினிக்கு ஆதரவாக அஜீத் ரசிகர்களும் களமிறங்கி டுவிட்டரில் விஜய் ரசிகர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பொதுவான ரசிகர்கள் 'லிங்கா' படம் சுமாராக இருப்பதாகவும் கே.எஸ்.ரவிகுமாரும், ஏ.ஆர்.ரஹ்மானும் அவசரகோலத்தில் பணிபுரிந்துள்ளதாகவும் படத்தை விமர்சனம் செய்துள்ளனர். லிங்கா திரைப்படத்திற்காக தியேட்டர் அதிபர்களும், விநியோகிஸ்தர்களும் போட்ட முதலீடு கிடைக்குமா? என்பது குறித்த தங்கள் சந்தேகத்தை தெரிவித்துள்ளனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.