திடீர் உடல் நலக்குறைவு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மருத்துவமனையில் அனுமதி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு காலையில் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்ட அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஒரு நாள் மருத்துவமனையில் தங்கியிருக்கும்படி அறிவுறுத்தினர். அதன்படி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஜனாதிபதியின் செய்தித்துறை செயலாளர் வேணு ராஜமணி கூறுகையில், ஜனாதிபதியின் உடல் நலம் டாக்டர்களால் தீவிரமாக கவனிக்கப்படுகிறது. எனினும் இந்த விவகாரத்தில் கவலைப்படும்படியாக எதுவும் இல்லை என்றார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த 11ந் தேதி தான் தனது 79வது பிறந்த நாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.