ஜப்பான் பாராளுமன்ற தேர்தல்: பிரதமர் சின்சோ அபே வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

ஜப்பானில் நடைபெற்ற மறு தேர்தலில் பிரதமர் ஷின்சோ அபே மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் ஜப்பான் பிரதமராக கடந்த 2012ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் சின்சோ அபே. இவருடைய பதவி காலம் முடிவடைவதற்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. எனினும் அண்மையில் நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவற்காக இவர் கொண்டு வந்த பல்வேறு சீர்திருத்தங்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து பாராளுமன்றத்தை கலைத்து விட்டு இடைத்தேர்தலை சந்திப்பதென கடந்த மாதம் சின்சோ அபே முடிவு செய்தார். அதன்படி 475 உறுப்பினர்களைக் கொண்ட ஜப்பான் பாராளுமன்ற கீழ் சபைக்கு நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலின் முடிவுகளில் மூன்றில் இரண்டு பங்கு என்ற கணக்கில் ஷின்ஷோ அபே வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஜப்பான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெற்றி குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார், அதில் அவர் கூறுகையில், ஆளும் அரசுக்கு பெரும்பான்மையான வெற்றி கொடுக்கப்பட்டு இருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தாழ்மையோடு விரும்புகிறோம்.கடந்த இரண்டு ஆண்டுகளில் அபே அரசின் செயல்பாடுகளின் அடிப்படையில் மக்கள் கட்டளையை நாங்கள் பெற்றுள்ளோம். ஆனால், நாங்கள் கொள்கைகளை அமல்படுத்தும் போது அகமகிழ்வு அடையாமல் , பொதுமக்களுக்கு கவனமாக விளக்குவோம் இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையே, மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷின்சே அபேவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டரில் மோடி தெரிவித்துள்ளதாவது:- தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நான் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் திறமையான தலைமையின் கீழ், வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு ஜப்பான் செல்லும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து மற்றொரு பதிவில், இந்தியா -ஜப்பான் உறவை வலுப்படுத்த தொடர்ந்து அபே சின்சோவுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி காத்து இருக்கிறேன் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.