பெண் பிணைக் கைதிகளை போன் செய்யச் சொல்லி தனது கோரிக்கையை வெளிட்ட தீவிரவாதி!

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சிட்னி காபி ஹோட்டலை சிறை பிடித்து வைத்துள்ள துப்பாக்கி ஏந்திய தீவிரவாதி, பிணைக் கைதிகளை அடிக்கடி ஜன்னல் அருகே மாற்றி மாற்றி நிற்க வைத்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிணைக் கைதிகளாக உள்ளவர்களில் இரு பெண்களை ஒரு ஆஸ்திரேலிய டிவி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு தனது கோரிக்கையை அவன் தெரிவித்துள்ளான். இருப்பினும் உள்ளே இருப்பவர்களின் பாதுகாப்பு கருதி அவற்றை அந்த டிவி நிறுவனம் வெளியிடவில்லை. சிட்னி மார்ட்டின் பிளேஸ் லின்ட் சாக்கலேட் கேஃப் ஹோட்டலை சிறை பிடித்து பல மணி நேரமாக அங்கு பலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளார் ஒரு துப்பாக்கி ஏந்திய நபர். தீவிரவாதி என்று சந்தேகப்படும் இந்த நபர் ஆஸ்திரேலிய பிரதமருடன் மட்டுமே பேசுவேன் என்றும் கூறி வருகிறார். இவர் வைத்துள்ள கோரிக்கை என்ன, எதற்காக இந்த செயல் என்று தெரியவில்லை. ஹோட்டலுக்குள் 50 பேர் வரை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் 15 பேர் மட்டுமே தீவிரவாதியின் பிடியில் இருப்பதாகவும் இன்னொரு தகவல் கூறுகிறது. இதுவரை 5 பேர் தப்பி வந்துள்ளனர். இதற்கிடையே தீவிரவாதி மற்றும் அவனது செயல்பாடுகள் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிரவாதி தாடி வைத்துள்ளான். வெள்ளுடையில் இருக்கிறான். கையில் ஷாட் கன் வைத்துள்ளான். வெடிகுண்டு வைத்துள்ளனா என்பது குறித்த உறுதியான தகவல்கள் இல்லை. பிணைக் கைதிகளை ஹோட்டலில் உள்ள ஜன்னல் கண்ணாடி அருகே அடிக்கடி மாற்றி மாற்றி நிற்க வைக்கிறானாம். ஹோட்டல் சமையல் அறையில் உள்ள உணவுப் பதார்த்தங்கள் பிணைக் கைதிகளுக்கு வழங்கப்படுகிறதாம். இதற்கிடையே, பிணைக் கைதிகளில் இரு பெண்கள் 9நியூஸ் என்ற ஆஸ்திரேலிய நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். தீவிரவாதியின் உத்தரவின் பேரில் அவர்கள் பேசினர். அவர்கள் தீவிரவாதி கூறிய கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். ஆனால் பாதுகாப்பு கருதி அந்த கோரிக்கைகளை அந்த நிறுவனம் வெளியிடவில்லை. மேலும் அரசுத் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது குறித்தும் அந்தப் பெண்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனராம். தீவிரவாதி அந்தப் பெண்களுக்குப் பின்னால் நின்று கொண்டு தெளிவாகச் சொல் என்று உத்தரவிடுவதும் போனில் கேட்டதாக 9நியூஸ் நிறுவனத் தகவல் தெரிவிக்கிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.