விராலிமலை ஸ்ரீமெய்க்கண்ணுடையால் கோயிலில் 1501- மாகாகுத்துவிளக்கு பூஜை

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருள்மிகு ஸ்ரீமெய்க்கண்ணுடையால் கோயிலில் மார்கழி மாதம் முதல் நாளான செவ்வாய்க்கிழமை 1501- மகாகுத்துவிளக்கு பூஜை அதிகாலை தொடங்கி நடைபெற்றது. விராலிமலை அருள்மிகு ஸ்ரீமெய்க்கண்ணுடையால் கோயில் வரலாற்று புகழ் பெற்ற கோயிலாகும், இக்கோயிலில் வருடம் தோறும் மார்கழி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு 1501 மகாகுத்துவிளக்கு பூஜை தொடங்கி மாதம் முழுவதும் செவ்வாய்- வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் அருள்மிகு ஸ்ரீமெய்க்கண்ணுடையால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் குத்துவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இப்பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு குடும்ப நலம், திருமணமாகாத கண்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம். இதனால் இவ்விளக்கு பூஜையில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொள்வது வாடிக்கை. நிகழாண்டுக்கான பூஜை செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் வளாகத்தில் தொடங்கியது இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு 1501 குத்துவிளக்குகளில் தீபம் ஏற்றி சுவாமி வழிபாடு செய்தனர். தொடர்ந்து மார்கழி மாதம் முழுவதும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இப்பூஜை நடைபெறுகிறது. விழவில் விராலிமலை ஒன்றியக்குழுத்தைலைவர் எம். சுப்பையா, ஒன்றியக்குழு உறுப்பினர் மணிமாலாசெந்தில், கூட்டுறவுசங்கத்தலைவர் வி. முருகேசன், இயக்குநர் ஜெ. ஆர். அய்யப்பன், ஊராட்சி செயலர் அம்மன்சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழாகமிட்டித்தலைவர் ஏ. கே. சுந்தரம் செய்து வருகிறார்
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.