சிட்னி காபி ஷாப் தீவிரவாதி சுட்டுக்கொலை. பணயமாக இருந்த இந்தியர்கள் உள்பட அனைவரும் மீட்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

நேற்று காலை ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு காபி ஷாப்பிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம மனிதன் ஒருவன் அங்கிருந்த சுமார் 50 பேர்களை பணயக்கைதியாய் வைத்திருந்தான். ஆஸ்திரேலிய போலீஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதோடு, பணயமாக வைக்கப்பட்டிருந்த இரண்டு இந்தியர்கள் உள்பட 47 பேர் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் தீவிரவாதியும், மேலும் ஒருவரும் பலியானதாக தகவல் கூறுகின்றன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதி ஈரான் நாட்டை சேர்ந்த அகதி என்றும் தெரிய வந்துள்ளது. ஹாரான் மோனீஸ் என்ற பெயருடைய இந்த அகதி ஈராக் மற்றும் சிரியாவில் ஆஸ்திரேலியா மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைக்கு பழிவாங்கவே காபி ஷாப்பினுள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் நான்குபேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஒருவர் கமாண்டோ படையை சேர்ந்தவர். சிட்னியின் லிண்ட் சாக்லேட் கபேயில், பிணைக்கைதியாக பிடிபட்டவர்களில் ஒருவர், இன்போசிஸ் நிறுவன ஊழியர். ஆந்திராவைச் சேர்ந்த அவர், சிட்னியில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவர் பிணைக்கைதியாக பிடிபட்ட விவரத்தை, அவரின் குடும்பத்திற்கு, பெங்களூருவை தலைமையகமாகக் கொண்ட இன்போசிஸ் நிறுவனம் நேற்று தெரிவித்தது. அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தது. ஆனால், ஆஸ்திரேலிய அதிரடிப்படையினர் நடத்திய திடீர் தாக்குதலில், அந்த ஊழியர் பத்திரமாக மீட்கப்பட்டார். உடன் ஆந்திராவில் உள்ள தன் வீட்டிற்கு, தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.