கட்சி தேர்தலில் மாற்றம்: மாவட்ட செயலாளர்களுடன் கருணாநிதி ஆலோசனை

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தி.மு.க கட்சித் தேர்தலில் வட்ட, கிளை செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு விட்டது. மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படாமல் உள்ளது. இதில் சில மாவட்டங்களில் கடும் போட்டி உள்ளது. சமரசமாக பேசி முடிவு எட்டப்பட்ட மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தி மாவட்டச் செயலாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மாவட்டச் செயலாளர்களை திடீரென சென்னைக்கு வரவழைத்து அவசர ஆலோசனை நடத்தினார். கோபாலபுரம் வீட்டில் காலை 11 மணிக்கு நடைபெற்ற இந்த கூட்டத்தில் கருணாநிதிவுடன் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய மேலாளர் ஜெயக்குமார் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களில் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், திண்டுக்கல் ஐ.பெரியசாமி, தூத்துக்குடி பெரியசாமி, சுரேஷ் ராஜன், வெள்ளக்கோவில் சாமிநாதன், சுப. தங்கவேலன், பெரிய கருப்பன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர்கள் மைதீன்கான், தங்கம் தென்னரசு ஆகியோரும் பங்கேற்றனர். கூட்டம் சுமார் 45 நிமிட நேரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளை எடுத்து கூறினர். சுமூகமாக தேர்தல் நடத்தி முடிக்க அனைத்து ஒத்துழைப்பை நல்கியதாக தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் பதவியை பெறுவது குறித்து, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பெரியசாமி ஆவேசமாக பேசினார். போட்டி உள்ள மாவட்டங்களில் தேர்தல் நடத்தி மாவட்டச் செயலாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியதாக தெரிகிறது. கூட்டம் முடிந்த பிறகு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் சென்றார். அங்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி பேராசிரியர் அன்பழகனுடன் ஆலோசனை நடத்தினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.