அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் நடத்தும் ஆணையாளர்கள் நியமனம்: ஜெயலலிதா அறிவிப்பு

| [ திரும்பி செல்ல ]

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க.வின் அனைத்து நிலைகளுக்குமான அமைப்புத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு முதல் கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இந்தநிலையில், 2-வது கட்டமாக வருகின்ற 27-12-2014 சனிக்கிழமை முதல் 31-12-2014 புதன்கிழமை வரை கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், கோவை மாநகர், கோவை புறநகர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள்; நகரங்களுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள்; பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் பகுதிகளுக்கு உட்பட்ட வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்களை நடத்திடும் வகையில், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதிகளுக்கான தேர்தல் ஆணையாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதே போல், மேற்கண்ட 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றியக் கழக நிர்வாகிகள்; நகரக்கழக நிர்வாகிகள்; பேரூராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் பகுதிக்கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கு 28-2-2015 முதல் 2-3-2015 வரை நடைபெற உள்ள 7-வது கட்டத் தேர்தல்களையும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையாளர்களே நடத்துவார்கள். கழக அமைப்பு தேர்தல்கள் சுமூகமாக நடைபெறும் வகையில் மண்டலத் தேர்தல் பொறுப்பாளர்கள்; மாவட்டத்தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளர்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.