பாகிஸ்தானில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பாகிஸ்தானில் தலிபான்களின் கொடூர தாக்குதலில் பலியான குழந்தைகளுக்காக 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இராணுவ பள்ளி ஒன்றில் புகுந்த 6 தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், மாணவர்கள் உள்பட 160 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பு, தங்களது வீரர்களை பாகிஸ்தான் இராணுவம் கொன்றதால் இவ்வாறு செய்து பழி தீர்த்ததாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலுக்கு அந்நாட்டு பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தீவிரவாதிகள் தாக்குதல்களில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 3 நாள் தேசிய துக்கத்தை அனுசரிப்போம். இந்த நாட்டில் தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்கும் வரையில் தீவிரவாதத்துக்கு எதிரான போர் ஓயாது, அதில் சந்தேகம் ஒன்றும் இல்லை என கூறியுள்ளார். மேலும் தாக்குதலில் பலியானது எனது குழந்தைகள் என்றும், அவர்களின் மரணம் என்னுடைய இழப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே தாக்குதலில் பலியான மாணவர்களுக்கு ரூபாய் 5 லட்சமும், படுகாயமடைந்த மாணவர்களுக்கு ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பான் கி மூன் கண்டனம் பாகிஸ்தானில் தலிபான்கள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், இந்த கொடூர செயல் கடுமையான கண்டனத்திற்குரியது. இதுபோன்ற கொடிய செயலுக்கு எந்தவித நியாத்தையும் கற்பிக்கமுடியாது. இதுபோன்ற பயங்கரத்திற்கு எந்த பிரச்னையையும் காரணமாக கூறமுடியாது, பாடம் கற்றுக்கொண்டிருக்கும் தற்காப்பில்லாத குழந்தைகள் மீது தாக்குதல் நடத்துவது கோழைத்தனமான, கொடிய செயல் என்று கூறியுள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.