சொந்த தாய்மாமனை வறுமையில் தவிக்க விட்ட விஜய்! - பேஸ்புக்கில் வெளுக்கும் வேலு பிரபாகரன்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

இயக்குநர் வேலு பிரபாகரன்.. நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன், உள்ளிட்ட பல படங்களைத் தந்தவர். தனது பேஸ்புக் பக்கத்தில் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். அடுத்த முதல்வராகக் காய் நகர்த்தும் விஜய், தன் சொந்த தாய்மாமன் வறுமையில் வாடுவதைக் கண்டு கொள்ளாத சிறு மனம் படைத்தவர் என்று கடுமையான மொழியில் விமர்சித்துள்ளார். இதுகுறித்து வேலு பிரபாகரன் எழுதியிருப்பதாவது: "என்னுடன் இருப்பவர் நடிகர் விஜய் அவர்களின் தாய் மாமன்.. தாயார் ஷோபா அவர்களின் அண்ணன...சுரேந்தர். இவரை ஒரு பழைய ஸ்கூட்டி ஓட்டியபடி வடபழனி ஏரியாவில் அடிக்கடி பார்ககலாம் மிக மிக சாதாரண வாழ்க்கை வாழும் அவரது நிலை எங்களை போன்ற சினிமாக்காரர்களுக்கே அதிர்ச்சியும், வேதனையும் தரும். இருவருக்கும் சரியான உறவில்லை என்று நெருங்கியவர்களுக்கு தெரியும், இருந்தாலும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற நோக்கத்தில் திட்டங்கள் தீட்டி காய்களை நகர்த்தும் ஒருவர். அதுவும் பல கோடிகளை ஊதியமாகப் பெரும் ஒருவர், எவ்வளவு மனக்கசப்பு இருந்தாலும் பரந்த மனப்பான்மையோடு தன் மாமன் நிலையை உயர்த்த மனமில்லாதவர்.. பல கோடிகள் புரளும் போதும் தன் இரத்த சொந்தம்... ஏழ்மையில் சிக்கியிருப்பதைக் கண்டும் உதவாத சிறு மனம் படைத்த, மனிதாபிமானமற்ற இதயமில்லாதவர்.. அரசியலுக்கு வந்து மக்களுக்கு என்ன செய்வார்?" -இவ்வாறு அவர் எழுதியுள்ளார். அதன் ஸ்கிரீன்ஷாட்டை இணைத்துள்ளோம். (வேலு பிரபாகரன் விஜய்யை ஒருமையில் எழுதியுள்ளார்) குறிப்பு: எஸ் என் சுரேந்தர் பிரபலமான பிண்ணனிப் பாடகர். தேவன் கோயில் தீபம் ஒன்று.. போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்கள் பாடியவர். சென்னை 28 படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலிருந்து நடிகர் மோகனுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் இவர்தான். ஆரம்ப நாட்களில் விஜய்க்கு மிக நெருக்கமானவராக இருந்தார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.