திருச்சி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் தேர்தல்: துரை சந்திரசேகரன், காடுவெட்டி தியாகராஜன் வெற்றி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தி.மு.க. உள்கட்சி தேர்தலில் நகர, ஒன்றிய செயலாளர்கள் வரை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். தற்போது மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. தி.மு.க.வில் நிர்வாக வசதிக்காக 65 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 35 மாவட்டங்களுக்கு போட்டியின்றி மாவட்ட செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாக தெரிகிறது. மீதமுள்ள 30 மாவட்டங்களுக்கு கடும் போட்டி இருப்பதால் ஓட்டு போட்டு மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுக்க தி.மு.க. தலைமை முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதன்படி இன்று திருச்சி வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை வடக்கு, கடலூர் மேற்கு, கன்னியாகுமரி கிழக்கு ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் நடத்தப்பட்டன. இந்த தேர்தலில் ஓட்டு போடுவதற்காக மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், பேரூர் பிரதிநிதிகள் வந்திருந்தனர். இதனால் அறிவாலயத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு ஓட்டுப்பெட்டி வைத்து தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தஞ்சை தெற்கு மாவட்டத்துக்கு துரை சந்திரசேகரன், எஸ்.எஸ்.ராஜகுமாரன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் துரை சந்திரசேகரன் 34 ஓட்டு வாங்கி வெற்றி பெற்றார். சு.ராஜகுமாரனுக்கு 31 ஓட்டுகள் கிடைத்தது. ஒரு ஓட்டு செல்லாத ஓட்டாக பதிவானது. வெற்றி பெற்ற துரை சந்திரசேகரன் டி.ஆர்.பாலு ஆதரவாளர் ஆவார். தோல்வி அடைந்த ராஜகுமாரன் முன்னாள் மத்திய மந்திரி பழனிமாணிக்கத்தின் தம்பி ஆவார். திருச்சி வடக்கு மாவட்ட தேர்தலில் காடுவெட்டி என். தியாகராஜன், முன்னாள் அமைச்சர் செல்வராஜ் ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 90 ஓட்டுகளில் 88 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. இதில் காடுவெட்டி என். தியாகராஜனுக்கு 87 ஓட்டுகள் கிடைத்தன. வெற்றி பெற்ற காடுவெட்டி தியாகராஜன் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர் ஆவார். கடலூர் மேற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் தேர்தலில் முன்னாள் எம்.பி.வே. கணேசன் 51 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரனுக்கு 11 ஓட்டுகளே கிடைத்தன. வெற்றி பெற்ற வே.கணேசன் எம். ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஆவார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.