எம்.ஜி.ஆர். 27-வது நினைவு நாள்: டிச: 24ந்தேதி மலர் அஞ்சலி; உறுதிமொழி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

எம்.ஜி.ஆரின் 27-வது ஆண்டு நினைவு நாளையொட்டி 24ந்தேதி (புதன் கிழமை) அன்று மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அண்ணா தி.மு.க. அவைத் தலைவர் இ. மதுசூதனன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அதனை தொடர்ந்து நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒப்புதலுடன் இன்று அண்ணா தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: அண்ணா தி.மு.க. நிறுவனத் தலைவர் இதய தெய்வம் பாரத் ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நம்மை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு அமரர் ஆகிய நாள் 24.12.1987. அவரது 27-வது ஆண்டு நினைவு நாளான 24ந்தேதி (புதன் கிழமை) அன்று காலை 10 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில், அண்ணா தி.மு.க. அவைத் தலைவர் இ. மதுசூதனன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து, அவரது நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள். கழகப் பொதுச் செயலாளர், மக்கள் முதல்வர்( புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இவ்வாறு அண்ணா தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.




வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.