முன்னாள் மத்திய மந்திரி நடிகர் நெப்போலியன் பாரதீய ஜனதாவில் சேருகிறார்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

நடிகர் நெப்போலியன் தி.மு.க.வில் பல்வேறு பதவிகளை வகித்தவர். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய மந்திரியாகவும் பணியாற்றினார். தி.மு.க.வில் செல்வாக்குடன் இருந்த நெப்போலியன் அழகிரி ஆதரவாளராக செயல் பட்டதால் கட்சியில் ஓரங்கட்டப்பட்டார். இதனால் கட்சிப்பணிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்து வருகிறார். இந்த நிலை யில் பா.ஜனதாவில் சேரும் முடிவை அவர் எடுத்துள்ளார். பா.ஜனதா தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். நாளை அவரை நேரில் சந்தித்து நெப் போலியன் பா.ஜனதா கட்சியில் சேருகிறார். நெப்போலியனுடன் அவரது ரசிகர் மன்ற மாநில தலைவர் கவுரிசங்கர், செயலாளர் மாந்துறை ஜெயராமன், பொருளாளர் சீதாராமன், துணை தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பா.ஜனதாவில் சேருகிறார்கள். பொகலூர் தொகுதி முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ. மணியும் பா.ஜனதாவில் இணைகிறார். சினிமா இசை அமைப் பாளர் கங்கை அமரனும் பா.ஜனதாவில் சேருகிறார். நேற்று மாலையில் கட்சி அலுவலகத்துக்கு சென்று தமிழக பெறுப்பாளர் முரளிதரராவ், மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோரை சந்தித்து கட்சியில் சேர தனது விருப்பத்தை தெரிவித்தார். இன்று மாலையில் அமித்ஷா முன்னிலையில் அவர் பா.ஜனதாவில் இணைகிறார். இதே போல் நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரும் இன்று அமித்ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் இணைகி றார்.




வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.