திமுக மா.செ. தேர்தல்: நாகை விஜயன் உட்பட 11 பேர் வெற்றி! நேரு,பன்னீர்செல்வம் 'அன்னபோஸ்ட்டாக' தேர்வு!

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் தேர்தலில் நாகை விஜயன், குத்தாலம் கல்யாணம், கன்னியாகுமரி சுரேஷ்ராஜன் உட்பட 11 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 2 மாவட்டங்களுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வருகிறது. 30 மாவட்ட செயலாளர்கள் தேர்தல் சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று அண்ணா அறிவாலயம், ராயபுரம் அறிவகத்தில் 13 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, திருச்சி வடக்கு, கடலூர் மேற்கு, கன்னியாகுமரி கிழக்கு ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 3 மணிக்கு நாகை வடக்கு, நாகை தெற்கு, கோவை வடக்கு, கோவை தெற்கு, கன்னியாகுமரி மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு அண்ணா அறிவாலயத்திலும், புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, மதுரை தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கு ராயபுரம் அறிவகத்திலும் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்ட செயலாளர்கள் விவரம்: தஞ்சை வடக்கு- எஸ்.கே.கல்யாணசுந்தரம் தஞ்சை தெற்கு - துரை சந்திரசேகர் (இவரை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பழனிமாணிக்கத்தின் தம்பி ராஜ்குமார் போட்டியிட்டார்) திருச்சி வடக்கு - காடுவெட்டி தியாகராஜன் (இவரை எதிர்த்து முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ் போட்டியிட்டார்) கடலூர் மேற்கு - வெ.கணேசன் கன்னியாகுமரி - சுரேஷ்ராஜன் நாகை வடக்கு - குத்தாலம் கல்யாணம், கோவை தெற்கு - தமிழ்மணி மதுரை தெற்கு - மணிமாறன் புதுக்கோட்டை வடக்கு - பெரியண்ணன்அரசு புதுக்கோட்டை தெற்கு - தங்கவேலு நாகை தெற்கு - ஏ.கே.எஸ்.விஜயன் போட்டியின்றி தேர்வான நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஒத்தி வைப்பு கோவை வடக்கு, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தேர்தலில் குளறுபடி ஏற்பட்டதால் இரண்டு மாவட்டங்களுக்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. திருச்சி செல்வராஜூக்கு ஒரு ஓட்டு? திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் செல்வராஜும் கே.என். நேருவின் ஆதரவாளர் காடுவெட்டி தியாகராஜனும் போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 90 ஓட்டுகளில் 88 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. இதில் காடுவெட்டி தியாகராஜனுக்கு 87 ஓட்டுகள் கிடைத்தன. முன்னாள் அமைச்சரான திருச்சி செல்வராஜூக்கு ஒரே ஒரு ஓட்டுதான் விழுந்தது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.