இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக ரிச்சர்டு ராகுல் வர்மா பதவியேற்றார்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிச்சார்டு ராகுல் வெர்மா(46) பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அமெரிக்க வெளியுறவு செயலர் ஜான்கெர்ரீ பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தூதராக பொறுப்பேற்கவிருக்கும் முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் இவர்தான். அடுத்த மாதம் டெல்லிக்கு ஜான் கெர்ரீ சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முன் ராகுல் வெர்மா இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். இந்திய குடியரசு தின விழவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்தியா வருகை தரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் வர்மாவின் நியமனத்தை கடந்த வாரம் அமெரிக்க செனட் சபை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது. இதையடுத்து அவர் அந்நாட்டு அதிபர் ஒபாமாவையும் சந்தித்தார். இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டதில் ராகுல் வர்மா முக்கிய பங்கு வகித்தவர். விசா மோசடி தொடர்பாக இந்திய தூதர் தேவையாணி கோப்ரகடே மீது எடுத்த நடவடிக்கை தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து நான்சி பவல் கடந்த மார்ச் மாதம் பதவி விலகினார். இதையடுத்து ராகுல் வெர்மா பதவியேற்கிறார். புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக பொறுப்பை தற்போது துணைதூதர் காத்லீன் ஸ்டீபன்ஸ் கவனித்து வருகிறார். இந்திய வம்சாவளியினர் கொண்டாடக்கூடிய நாள் இது என்று இந்திய வம்சாவளி அமைப்பின் தேசிய தலைவர் சம்பத் ஷிவாங்கி தெரிவித்தார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.