நடிகர் நெப்போலியன் அமித்ஷா முன்னிலையில் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

முன்னாள் மத்திய மந்திரி, நடிகர் நெப்போலியன் இன்று அமித்ஷா முன்னிலையில் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். தி.மு.க.வில் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்தார் நடிகர் நெப்போலியன். இவர் எம்.எல்.ஏ. ஆகவும், எம்.பி. ஆகவும், மத்திய மந்திரியாகவும் தி.மு.க.வில் இருந்து பணியாற்றி இருக்கிறார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது, தி.மு.க. சார்பில் போட்டியிட சீட் கேட்டு, நடிகர் நெப்போலியன் விண்ணப்பிக்கவில்லை. அதன் பின்னர் தி.மு.க. பணிகளில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று தி.மு.க.வில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதி முகவரியிட்டு கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு கொடுத்து அனுப்பினார். தி.மு.க.வில் இருந்து விலகிய நடிகர் நெப்போலியன், இன்று பா.ஜ.க.தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார். தி.மு.க.வின் தற்போதைய செயல்பாடு எனக்கு பிடிக்கவில்லை. தி.மு.க.வில் ஜனநாயகம் இல்லை. நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் பல குளறுபடிகள் உள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதியை மீறி ஸ்டாலின் ஆதிக்கம் அதிகமாக சென்று கொண்டிருக்கிறது. என்று நடிகர் நெப்போலியன் குற்றம் சாட்டியுள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.