திரைப்பட இயக்குநர் கே. பாலச்சந்தர் மரணம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தர் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். தமிழ் சினிமா உலகின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான கே.பாலச்சந்தருக்கு 84 வயதாகிறது. கடந்த வாரம் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உடனடியாக ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இயக்குநர் பாலச்சந்தரின் உயிர் மருத்துவமனையில் வைத்து இன்று மாலை பிரிந்தது. "இயக்குநர் சிகரம்" என்று அழைக்கப்பட்ட கே.பாலச்சந்தர் நீர்குமிழி படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர். தமிழ் திரை உலகில் ரஜினி, கமல் ஆகிய இரு முன்னணி ஹீரோக்களையும் அறிமுகம் செய்தவர் கே.பாலச்சந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.