பாஜகவின் அடுத்த குறி தமிழகம்தான்.. 2016ல் நிச்சயம் வெல்வோம்... தமிழிசை நம்பிக்கை

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

நரேந்திரமோடியின் நல்லாட்சிக்கு மக்கள் அங்கீகாரம் அளித்து வருகிறார்கள். மற்ற மாநிலங்களில் தொடரும் இந்த வெற்றி 2016 தேர்தலில் தமிழகத்திலும் கிடைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட், காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட்டில் ஆட்சியை கைப்பற்றியது. காஷ்மீரில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த வெற்றியை தமிழக பாஜகவினர் சென்னை கமலாலயத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள், வானதி சீனிவாசன், சவேரா சக்கரவர்த்தி, பொதுச் செயலாளர் நரேந்திரன், குடிசை மேம்பாட்டு வளர்ச்சி பிரிவு தலைவர் வி.எஸ்.ஜே. சீனிவாசன், மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், பிரகாஷ், ஜெயங்சங்கர், மீனவர் அணி தலைவர் சதீஷ், ஜி.கே.எஸ்., ஜான், விவேகானந்தன், அலங்கார முத்து, கேன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பாஜகவின் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: பாஜகவின் தேசிய தலைவராக அமித்ஷா பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற அனைத்து மாநில தேர்தல்களிலும் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. நரேந்திரமோடியின் நல்லாட்சிக்கு மக்கள் அங்கீகாரம் அளித்து வருகிறார்கள். மற்ற மாநிலங்களில் தொடரும் இந்த வெற்றி 2016 தேர்தலில் தமிழகத்திலும் கிடைக்கும். அமித்ஷாவின் வருகை அதற்கான மாற்றத்தை ஏற்படுத்தும். பாஜகவின் வெற்றியை பொறுக்க முடியாத எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்குகின்றனர். கட்டாய மதமாற்ற தடை சட்டம் என்பது ஒரு விவாத பொருளாவே இருந்து வருகிறது. அலகாபாத் உயர்நீதிமன்றம் கூட திருமணத்துக்காக ஒரு பெண் மதம் மாறுவதை ஏற்க முடியாது. இது ஒரு சமூக அவலமாக மாறிவிடும் எனக் கூறியுள்ளது. பாஜக மதவேற்றுமையை ஏற்படுத்துவது போல் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் விமர்சித்து உள்ளார். ஊழலுக்கு காரணமானவர்கள், ஊழலால் தண்டிக்கப்பட்டவர்கள் எங்களை பற்றி விமர்சிக்க தகுதி இல்லை. நேருவின் கொள்ளுபேரன் என்ற ஒரு காரணத்துக்காக ராகுல்காந்தி விமர்சனத்துக்கு அப்பாற்றப்பட்டவர் அல்ல. சுதந்திரத்துக்காக போராடிய அன்றைய காங்கிரஸ் வேறு. இன்றைய காங்கிரஸ் வேறு. அமித்ஷா சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவரா? என்று இளங்கோவன் கேட்கிறார். ஊழலுக்கு எதிரான இரண்டாவது சுதந்திர போரை அமித்ஷா தலைமையில் எங்கள் கட்சி நடத்தி வருகிறது என்பதை அவருக்கு நினைவூட்டுகிறேன். இளங்கோவன், வாசன், திருமாவளவன் ஆகியோருக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். மதத்தின் பெயரால் மக்கள் இடையே மதவேற்றுமையை ஏற்படுத்தி அரசியல் செய்யாதீர்கள். திருமாவளவன் கூறுவது போல் எந்த மாநிலத்திலும் இந்தியை திணிக்கவில்லை. நாங்கள் பலம் பெற்று வருவதை பொறுக்க முடியாமல் இதுமாதிரியான விமர்சனங்களை கூறி வருகிறார்கள் என்றார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.