தி.மு.க. மா.செ. தேர்தல்: ' ஆவுடையப்பன், பெரியகருப்பன் வெற்றி!

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் வெற்றி பெற்றனர். விழுப்புரம், திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு ஆதரவாளர்கள் வென்றுள்ளனர். லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பின்னர் 34 மாவட்டங்களாக இருந்த திமுக 65 ஆக பிரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 30 மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை சென்னையில் நடத்தப்பட்டது. சென்னையில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் வெற்றி பெற்றனர். நேற்றைய தேர்தல் முடிவுகள்: விழுப்புரம் வடக்கு - மஸ்தான் விழுப்புரம் தெற்கு- முன்னாள் எம்.எல்.ஏ., அங்கயற்கன்னி (அன்னபோஸ்ட்) திருவண்ணாமலை வடக்கு - முன்னாள் எம்.எல்.ஏ., சிவானந்தம் ராமநாதபுரம் - முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் மகன் திவாகரன் சிவகங்கை - பெரியகருப்பண்ணன் திருநெல்வேலி கிழக்கு- முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் திருநெல்வேலி மேற்கு - துரைராஜ்
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.