பெஷாவர் படுகொலையை திட்டமிட்ட தலிபான் தளபதி சுட்டுக் கொலை

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பெஷாவர் தாக்குதலை திட்டமிட்ட தலிபான் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள ராணுவ பள்ளி ஒன்றில் புகுந்த 7 தலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 134 குழந்தைகள் உட்பட 150 பேர் பலியாகி உள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு தெஹ்ரிக் இ தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில் பள்ளியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட சதாம் (saddham) என்ற தலிபான் தளபதி வடக்கு பெஷாவரில் உள்ள ஜம்ரூத் (Jamruth)என்னும் இடத்தில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் பழங்குடியினர் பகுதியான கைபர் (Khyber) பகுதியில் இவர் பதுங்கியிருந்ததாகவும், தீவிரவாத தாக்குதலை திட்டமிட்டு 7 பேரை அனுப்பியவர் இவர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.