உயிரோடு புதைத்து விடுவோம்...தந்தையே மகளுக்கு செய்த கொடூரம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

நைஜீரியாவில் 13 வயது சிறுமியை அவரது தந்தையே போகோஹராம் தீவிரவாதிகளிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் சஹரூ(Zaharu Age-13) என்ற சிறுமியின் தந்தை, தன் மகளை பெளச்சி(Bauchi) மாநிலத்தில் உள்ள போகோஹராம் தீவிரவாதிகளிடம் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து சிறுமியை தற்கொலைப்படை வீரராக மாறி, கானோ(Kano) நகரில் தாக்குதல் நடத்த வேண்டும் என தீவிரவாதிகள் நிர்பந்தித்துள்ளானர். ஆனால் அதை சிறுமி ஏற்க மறுத்தபோது, உயிருடன் புதைத்து விடுவோம் என தீவிரவாதிகள் மிரட்டியுள்ளனர். இந்நிலையில் தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு பயந்த சஹரூ, கானோ நகரில் இரண்டு சிறுமிகளுடன் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த அனுப்பப்பட்டுள்ளார். இதன்பின் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் தப்பியதையடுத்து, பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் அவர் கூறியதாவது, நான் தற்கொலைப் படையாக மாற மறுத்தேன். ஆனால் தீவிரவாதிகள் என்னை உயிரோடு புதைத்துவிடுவேன் என மிரட்டினர். மேலும் என்னை போல் மறுப்பு தெரிவித்த சிறுமிகளை அவர்கள் மண்ணில் புதைத்ததையும் என்னிடம் காண்பித்தனர் என கூறியுள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.