வெள்ளத்தில் மிதக்கின்றது மலேசியா

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

மலேசியாவில் இதுவரை இல்லாத அளவில் வரலாறு காணாத கனமழை பெய்த காரணத்தால் அந்நாட்டில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கி கிடைக்கின்றது. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. சுமார் 120,000 பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள மலேசிய பிரதமர் நாஜிப் ரசாக் அவசர அவசரமாக நாடு திரும்புகிறார். கோலாலம்பூரில் உள்ள ஸ்டார் ஹோட்டல்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க மீட்புப்படையினர்களும், ராணுவத்தினர்களும் இணைந்து இரவுபகல் பாராது பணிபுரிந்து வருகின்றனர். நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதால் பெரும்பாலான இடங்கள் இருளில் மூழ்கியுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.