கோச்சடையான் கடனை திருப்பி செலுத்தாத விவகாரம். லதா ரஜினியின் சொத்து முடக்கம்.

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

கோச்சடையான் திரைப்படத்தை தயாரித்த நிறுவனம் வாங்கிய வங்கிக் கடனை செலுத்தாததால், உத்தரவாதம் அளித்த லதா ரஜினிகாந்தை கடனை கட்டக்கோரி தனியார் வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதோடு கடனுக்கு ஈடாக உத்தரவாதம் அளித்த 2 ஏக்கர் நிலத்தை ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ளது, மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் நிறுவனம் தான் கோச்சடையான் படத்தை தயாரித்தது. இப்படத்திற்காக எக்ஸிம் வங்கியில் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், 20 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தது. அந்நிறுவனம் வாங்கிய கடனுக்காக ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தங்கள் குடும்ப சொத்தான 2.13 ஏக்கர் நிலத்தை ஈடாக காட்டி கேரண்டராக கையெழுத்து போட்டிருந்தார். தற்போது மீடியா ஒன் குளோபல் நிறுவனம் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி தராததால், உத்தரவாதம் தந்த லதா ரஜினிகாந்தின் சொத்துக்கள் ஏலம் விடப்போவதாக அறிக்கை வந்துள்ளது. மீடியா ஒன் குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எக்ஸிம் வங்கியில் இருந்து தாங்கள் 20 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்ததாகவும், தங்களது சொந்த திறன் மற்றும் தொழில் அடிப்படையிலேயே மேற்படி கடனை வாங்கி இருந்ததாகவும், வருகிற 2015 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் கடனை திருப்பி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.