வெப்பமண்டல காட்டில் வாழும் குரங்கு. ஒபாமாவை கடும் விமர்சனம் செய்த வடகொரியா.

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை குரங்கு என விமர்சித்து வடகொரியா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க தயாரிப்பு நிறுவனமான ஹாலிவுட் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் 'தி இன்டெர்வியூ'. இந்தப் படம் வட கொரிய அதிபர் கிம் ஜோங்கை கிண்டல் செய்யும் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது. அவரை படுகொலை செய்ய அமெரிக்க புலனாய்வு துறை திட்டமிடுவதாக கதை அம்சம் உள்ளது. இந்த படத்தை வெளியிட வட கொரியா எதிர்ப்பு தெரிவித்ததுடன், வெளியாகும் தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து சோனி பிக்சர்ஸ் 'தி இன்டர்வியூ' திரைப்படம் வெளியிடுவதை நிறுத்துவதாக அறிவித்து, பின்னர் அதனை திரும்பப் பெற்று முதலில் அறிவித்தபடியே கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட்டது. இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது, இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் வடகொரியாவில் இணையதள சேவை முடங்கியது. இந்த முடக்கத்திற்கு அமெரிக்காவின் சதியே காரணம் என்று வட கொரியா பாதுகாப்பு ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், 'வெப்ப மண்டலக் காடுகளில் உலவும் குரங்குதான் ஒபாமா. அவரது பேச்சும், செயலும் குரங்கிற்கு ஈடானதுதான்' என்று வட கொரியா பாதுகாப்பு ஆணையம் அமெரிக்க ஜனாதிபதியை விமர்சித்துள்ளது. இந்த விமர்சனத்துக்கு அமெரிக்கா தரப்பிலிருந்து எந்த பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.