162 பயணிகளுடன் கடலில் மூழ்கிய ஏர் ஏசியா விமானம்! இந்தோனேஷிய அரசு தகவல்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

கடலில் மாயமான ஏர்ஏசியா விமானத்தை தேடுல் பணி நடைபெறும் இடத்தில், விமான பாகங்களை ஆஸ்திரேலியா விமானம் கண்டுபிடித்தது என்று இந்தோனேசியா அதிகாரி தெரிவித்துள்ளார். 162 பேருடன் இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நேற்று திடீர் என்று மாயமானது. இந்தோனேஷியாவில் உள்ள சுரபவா என்ற இடத்தில் இருந்து சிங்கப்பூரை நோக்கி உள்ளூர் நேரப்படி நேற்று காலை 5.20 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானம், நேற்று காலை 8.30 மணிக்கு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தை சென்று அடைந்திருக்க வேண்டும். ஆனால், புறப்பட்டு சென்ற 42 நிமிடங்களில் அது மாயமானது. அதாவது காலை 7.24 மணிக்கு (இந்திய நேரம் அதிகாலை 4.54 மணி), இந்த விமானம், விமான கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை திடீரென இழந்தது. மாயமான ஏர் ஆசியா விமானம், தொடர்பினை இழப்பதற்கு முன்பாக, வழக்கமான தடத்திலிருந்து மாறிச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. மோசமான வானிலை காரணமாக, திட்டமிட்ட பாதையிலிருந்து விலகிச்செல்ல அனுமதிக்குமாறு விமானி கேட்டுக்கொண்டதாக ஏர் ஆசியாவும் தெரிவித்தது. மேகமூட்டத்தை தவிர்ப்பதற்காக விமானத்தை 32 ஆயிரம் அடி உயரத்திலிருந்து 38 ஆயிரம் அடி உயரத்துக்கு கொண்டு செல்லவும் விமானி அனுமதி கேட்டுள்ளார். சுமத்ரா தீவின் அருகே கிழக்கு பெலிடிங் ரீஜன்சி பகுதியில் உள்ள கடலில், காணாமல் போன விமானம் விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. விமானத்தில் உள்ள எரிபொருள், தீர்ந்து பல மணி நேரம் ஆகி இருக்கும் என தகவல்கள் கூறுவதால், அது விபத்துக்குள்ளாகி இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. காணாமல் போன விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. விமானம் கடலில் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதால், தேடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் 162 பேருடன் மாயமானதாக கூறப்பட்ட ஏர்ஏசியா விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்று மீட்பு குழு தலைவர் காலை தெரிவித்தார். கடலுக்கு அடியில் விமானம் கிடக்கலாம் என்று அவர் கூறினார். இதனையடுத்து தேவையான தொழில்நுட்ப கருவிகளுக்கு இந்தோனேசியா மற்றநாடுகளின் உதவியை கோரியது. இந்நிலையில் விமானத்தின் பாகத்தை கடல்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலில் ஏர்ஏசியா விமானத்தை தேடும் இடத்தில் விமான பாகங்களை ஆஸ்திரேலியா விமானம் கண்டுபிடித்தது என்று இந்தோனேசியா அதிகாரி தெரிவித்ததாக செய்திநிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜகார்த்தா விமானப்படை கமாண்டர் ரியர் மார்ஷால் பேசுகையில், நாங்கா தீவு பகுதியில், பாங்காலான் பன்னிற்கு தெற்குமேற்காக 160 கிலோ மீட்டர் தொலைவில் விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்களை ஆஸ்திரேலியாவின் ஒரியான் விமானம் கண்பிடித்துள்ளது. என்று கூறியுள்ளார். இருப்பினும், இது மாயமான ஏர் ஏசியா விமானத்தின் பாகம்தான் என்று நாங்கள் உறுதிபடுத்த முடியாது. நாங்கள் தற்போது அப்பகுதியை நோக்கி, தேடுதல் வேட்டையை நகர்த்தியுள்ளோம். அங்கு மிகவும் மேகமூட்டமான நிலை காணப்படுகிறது. என்று அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இந்தோனேசியா ஹெலிகாப்டரும் கடலில் தேடுதல் வேட்டை நடைபெற்ற பகுதியில் எண்ணெய் படலத்தை கண்டுபிடித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.