செவ்வாய்க்கு இனி ஈஸியா போகலாம்: நாசாவின் புதிய திட்டம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல புதிய மாற்று முறை ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் பாதை நீண்ட தூரம் கொண்டதாய் உள்ளது. இதற்காக பல ஆயிரம் கோடிகளை செலவிடுவதுடன், அங்கு சென்று இறங்குவது என்பதும் சற்று சிக்கலான விசயமாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் நோக்கில் பாலிஸ்டிக் கேப்சர் (ballistic capture) என்ற புதிய முறையை நாசா விஞ்ஞானிகள் கையாளவுள்ளனர். இதன் மூலம் குறைந்த அளவிலான எரிபொருளை பயன்படுத்தியும், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்க முடியும். இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், இந்த புதிய முறையின் மூலம் எதிர்காலத்தில், செவ்வாய் கிரகத்திற்கு ரோபோட்கள், மனிதர்களை அனுப்புவது மட்டுமின்றி மனிதர்களை செவ்வாயில் குடியேற்றமும் செய்ய முடியும் என்றும் இது நமக்கு பொருட் செலவை மிச்சப்படுத்தும் எனவும் கூறியுள்ளனர். ஆனால் இதில் ஒரு பிரச்சனை மட்டுமே உள்ளது. அதாவது Hohmann முறை மூலம் உடனடியாக அடுத்த வட்டப் பாதைக்கு மாறி விட முடியும். மாறாக பாலிஸ்டிக் முறையில் மாறுவதற்கு அதிக நேரம் பிடிக்கும் என கூறப்படுகிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.