பிரான்சை ஸ்தம்பிக்க வைத்த ஆலங்கட்டி மழை

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பிரான்சில் பொழிந்த ஆலங்கட்டி மழையினால் 15,000 வாகங்கள் நகர முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் ஆல்ப்ஸ் பகுதியில் நேற்று இரவு பொழிந்த ஆலங்கட்டி மழையினால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை காப்பாற்ற உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக தற்காலிக முகாம் அமைத்து அவர்களை தங்க வைத்துள்ளனர். குறிப்பாக சவாய் பகுதியில் உள்ள சிறுகுடில், கார்கள் மற்றும் விமான நிலையத்தை இந்த ஆலங்கட்டி மழை மூடியுள்ளதாக அப்பகுதி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சாலையெங்கும் பனிக்கட்டிகள் நிரம்பி இருந்ததால் வாகன பயணத்திற்கு அபாயகரமாக இருந்தது. மேலும் இதையும் மீறி பயணம் செய்த இளைஞன் ஒருவர் பெல்லேடொன்னே (Beleadenne)மலையின் 200 மீட்டர் உயரத்தில் இருந்து காருடன் உருண்டு உயிரிழந்துள்ளார். எனவே வாகங்களை கவனமாக ஓட்டிச் செல்ல வேண்டும் என்றும் முடிந்தவரை பயணத்தை தள்ளிப்போட வேண்டும் எனவும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்டு கசேநெவ் (Bernard Gazanev)அறிவுரை கூறியுள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.