திருவாதிரை குழம்பு ...

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

இதை ஏழுதான் குழம்புன்னு சொல்வார்கள். பேர்தான் ஏழே தவிர எத்தனை தான் வேணும்னாலும் போடலாம். தேவையானவை பூசனி, பறங்கி, அவரை, கொத்தவரை, மொச்சைப்பருப்பு, பச்சைப்பட்டாணி, உருளைக் கிழங்கு,குடமிளகாய்,சௌசௌ சேனை, வெள்ளிக்கிழங்கு,காரட், தக்காளி கத்ரிக்காய், வாழைக்காய்,. நீர்ப் பண்டங்களான, பூசணி,சௌசௌ சற்று நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். சேனைக் கிழங்கு போடுவதானால் தனியே வேகவைத்துப் போடவும். மொத்தமாக 5 , 6 கப் காய்கள் எடுத்துக் கொள்வோம். துவரம்பருப்பு ஒரு கப் வேக வைத்துக் கொள்ளவும் வறுத்தரைக்க சாமான்கள். வற்றல் மிளகாய் .....10 தனியா ..... 2 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு ..... ஒரு டீஸ்பூன் தேங்காய்த் துருவல் ஒரு மூடி எண்ணெய் ..... 2 டேபிள்ஸ்பூன் புளி ஒருபெரிய எலுமிச்சை அளவு கரைப்பதற்கு தாளிப்பிற்கு கடுகு, பெருங்காயம் வாஸனைக்கு கொத்தமல்லி கறிவேப்பிலை ருசிக்கு உப்பு செய்முறை ........ புளியை ஊறவைத்துக் கறைத்து வைத்துக் கொள்ளவும். 4 கப் அளவிற்கு. வறுக்கக் கொடுத்த சாமானகளை சிறிது எண்ணெயில் வறுத்தெடுத்து,தேங்காயையும், சேர்த்துப் பிறட்டி ஆரவைத்து மிக்ஸியில் ஜலம் சேர்த்து மசிய அறைத்துக் கொள்ளவும். குழம்புப் பாத்திரத்தில் சிறிது எண்ணெயில் காய்களை வதக்கி புளி ஜலத்தைச் சேர்த்து உப்பு, மஞ்சள்பொடி கலந்து கொதிக்கவிடவும். காய்கள், வெந்ததும் அரைத்த விழுதைக் கறைத்துச் சேர்த்து மேலும் கொதிக்கவிட்வும் வெந்த பருப்பையும் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும். கடுகு பெருங்காயம் தாளித்து கொத்தமல்லி கறிவேப்பிலை சேர்க்கவும். குழம்பிற்கு பச்சைமிளகாய் சேர்த்தால் வாஸனையாக இருக்கும். இனிப்புக் களிக்கு ஜோடி சேர்த்து சாப்பிடுவது ஒரு பழக்கம்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.