திருவாதிரை களி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

திருவாதிரை என்றாலே அன்று செய்யப்படும் களி தான் அனைவர் நினைவிற்கும் வரும். திருவாதிரை தினத்தன்று இறைவனுக்கு நிவேதனமாக படைக்கப்படும் களி செய்யும் முறையை காணலாம் வாங்க. தேவையானவை: பச்சரிசிரவை 1 கப் (அரிசியை களைந்து உலர்த்தி மிக்ஸியில் பொடிக்கவும்) பயத்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன் கடலைபருப்பு 1 டேபிள் ஸ்பூன் வெல்லம் 3 / 4 கப் தேங்காய் துருவல் 4 டேபிள் ஸ்பூன் நெய் 3 டேபிள் ஸ்பூன் முந்திரி, திராட்சை, ஏலப்பொடி செய்முறை: பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். பின்பு அரிசிரவையும் நன்கு வறுக்கவும். மிக்ஸியில் பருப்பு, ஆரிசியை ரவை போல் பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து, 2 டம்ளர் தண்ணீர் வைத்து வெல்லத்தை கரைய விடவும். நன்கு கரைந்தும் வடிகட்டி, கொதிக்க ஆரம்பித்ததும், 2 ஸ்பூன் நெய் விட்டு, பொடித்த ரவைகளை போடவும். அடுப்பை சின்னதாக்கி கட்டி தட்டாமல் நன்கு கிளறவும். வேண்டுமானால் மேலும் தண்ணீர் தெளித்து கொள்ளலாம். சிறிது நேரம் மூடி போட்டு மூடி வைத்து, நடுநடுவே கிளறி விடவும். ரவை வெந்ததும் தேங்காய் துருவல், ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும். நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்துக் களியுடன் சேர்க்கவும். சுவையான திருவாதிரை களி தயார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.