போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி 107 சதவீதமாக உயர்வு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 107 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு தற்போது 100 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. அதை மேலும் 7% உயர்த்தி 107 சதவீதமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 11 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 107 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.