சகாக்களிடம் ஓய்வு முடிவை கூறுகையில் கண்கலங்கிய டோணி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

டோணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை இந்திய கிரிக்கெட் அணியிடம் தெரிவித்தபோது கண்கலங்கிவிட்டாராம். மஹேந்திர சிங் டோணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து விராட் கோஹ்லி புதிய கேப்டனாக ஆகியுள்ளார். டோணி வீரர்கள் உடை மாற்றும் அறைக்கு சென்று தனது சகாக்களிடம் ஓய்வு முடிவை தெரிவித்துள்ளார். அப்போது அவரையும் அறியாமல் கண்கலங்கியுள்ளார். சக வீரர்கள் டோணியை கட்டிப்பிடித்து அவருடன் புகைப்படம் எடுத்துள்ளனர். ஓய்வு பெறும் முடிவை சக வீரர்களிடம் தெரிவிக்கையில் டோணி கண்கலங்கினார் என வீரர்கள் உடைமாற்றும் அறையில் இருந்த ஒருவர் தன்னிடம் கூறியதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் தெரிவித்தார். உடைமாற்றும் அறைக்குள் டோணி வந்தபோது அவர் என்ன சொல்லப் போகிறார் என்று எங்களுக்கு தெரியாது. எந்தவித நாடகமும் இன்றி அவர் தனது முடிவை பளிச்சென தெரிவித்தார் என்றார் அணியின் டைரக்டர் ரவி சாஸ்திரி. என்னால் அனைத்து வித கிரிக்கெட்டையும் இனியும் விளையாட முடியாது, அதனால் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று டோணி தெரிவித்ததாக சாஸ்திரி கூறினார். என்னால் அனைத்து வித கிரிக்கெட்டையும் விளையாட முடியாது என்பதை தெரிவித்துள்ளார் என்றால் அதில் இருந்தே டோணியின் நேர்மை தெரிகிறது என்றார் ரவி சாஸ்திரி.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.