ஜிமெயிலுக்கு சீன அரசு தடை. கூகுள் நிறுவனம் அதிர்ச்சி.

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சீனாவில் ஏற்கனவே ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற இணையதளங்களுக்கு தடை இருந்து வரும் நிலையில் தற்போது கூகுளின் ஜிமெயிலுக்கு சீனா தடை விதித்துள்ளது. ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு தேவையான அனைத்து வழிகளையும் சீன அரசு முடக்கிவிட்டதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஜிமெயிலை சீனர்களும் இதுநாள் வரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சீன அரசு கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஜிமெயிலை முற்றிலும் முடக்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் முதற்கொண்டே கூகுளின் மீது பல தடைகளை விதித்து வரும் சீனா, தற்போது திடீரென ஜிமெயிலையும் தடை செய்திருப்பது சீன மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இருப்பினும் அங்கு யாஹூ மெயில் தங்கு தடையின்றி செயல்பட்டு வருகிறது. பல மில்லியன் சீன மக்கள் ஜிமெயில் சேவையை பயன்படுத்தி வந்த நிலையில் திடீரென அந்த நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் கூகுள் நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.