பிறக்கும்போதே லட்சாதிபதியாக மாறும் சிங்கப்பூர் குழந்தைகள்.

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சிங்கப்பூர் நாளை பிறக்கவிருக்கும் 2015ஆம் ஆண்டை பொன்விழா ஆண்டாக கொண்டாட முடிவு செய்துள்ளது. இதனையொட்டி நாளை சிங்கப்பூரில் பிறக்கவிருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் விலை மதிப்புடைய பரிசுகளை வழங்கவிருப்பதாக சிங்கப்பூர் அரசு தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் வாழும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும், வெளிநாட்டில் வாழும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த பரிசு வழங்கப்படும். சிங்கப்பூர் அரசு மட்டுமின்றி அங்குள்ள முக்கிய தனியார் நிறுவனங்களும், ஒருசில வங்கிகளும் நாளை பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு வழங்க முடிவு செய்துள்ளன. எனவே நாளை சிங்கப்பூரில் பிறக்கப்போகும் குழந்தைகள் பிறந்தவுடனே லட்சாதிபதியாக மாறும் வாய்ப்பு உள்ளது. பின்லாந்து நாட்டில் கடந்த 1930ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டில் கர்ப்பிணித் தாய்களுக்கு குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுவது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.