பேச்சுவார்த்தை வெற்றி : போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்

| [ திரும்பி செல்ல ]

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் மற்றும் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இடையே இன்று காலை நடந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதை அடுத்து, போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் மற்றும் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இடையே இன்று காலை நடந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதை அடுத்து, போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்களின் அனைத்து சங்க பிரதிநிதிகளுடன், போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், தொழிற்சங்கங்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தும் என்று அமைச்சர் அறிவித்தார். மேலும், தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்ததாக சிஐடியு தெரிவித்துள்ளது. போராட்டத்தின் போது கைதான ஊழியர்கள் அனைவரையும் விடுவிக்கவும் தமிழக அரசு ஒப்புக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 4 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.