ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு வாபஸ்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

அ.தி.மு.க. பொதுச்செய லாளரும், முன்னாள் முதல்-அமைச்சரு மான ஜெயலலிதா 2 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என்று அவர் மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கு எழும் பூர் பொருளாதார குற்றவி யல் நீதிமன்றத்தில் நீதிபதி தட் சிணாமூர்த்தி முன்னிலையில் நடந்து வந்தது. இதற்கிடையே ஜெய லலிதா தரப்பில் வருமான வரியுடன் சேர்த்து அபராதத் தொகையை செலுத்த தயாராக இருப்பதாக வரு வாய்த்துறைக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. இதை பரிசீலித்த வருமான வரித்துறை ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. அவர் வருமான வரி மற்றும் அபராதத் தொகையுடன் சேர்த்து ரூ.2 கோடி செலுத்த உத்தரவிட்டது. அதன்படி ஜெயலலிதா தரப்பில் ரூ.2 கோடி செலுத்தப்பட்டது. இன்று எழும்பூர் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பில் வக்கீல் கருப்பையா ஆஜராகி வருமான வரி வழக்கில் சமரசம் ஏற்பட்டதாகவும், ஜெயலலிதா ரூ.2 கோடி செலுத்தி விட்டதாகவும் தெரிவித்தார். அதற்கான பத்திரங்களையும் தாக்கல் செய்தார். இதேபோல் வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல் ராமசாமி, ஜெயலலிதா மீதான வரு மான வரி வழக்கில் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வருமான வரி சட்டம் 272-ன்படி வழக்கை வாபஸ் பெற வருமான வரித்துறை முடிவு எடுத்துள்ளதாக தெரி வித்தார். இதையடுத்து நீதிபதி தட்சிணாமூர்த்தி இன்று பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பு கூறுவதாக அறிவித்தார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.