பலாத்கார புகார்: உலக கோப்பை அணிக்கு தேர்வான வங்கதேச கிரிக்கெட் வீரர் சிறையில் அடைப்பு!

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான அணியில் தேர்வு செய்யப்பட்ட வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ருபேல் ஹொசைன், நடிகை ஒருவர் கொடுத்த பலாத்கார புகாரின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் வங்கதேச அணி நிர்வாகம் திகைப்படைந்துள்ளது. 19 வயதான, வங்கதேச சினிமா நடிகையான நஸ்னின் அக்தர் ஹேப்பிக்கும், அந்நாட்டின் வேகப்பந்து வீச்சாளர் ருபேல் ஹொசைனுக்கும் இடையே காதல் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம், நஸ்னின், பரபரப்பு புகார் ஒன்றை காவல் நிலையத்தில் அளித்தார். அந்த புகாரில், ருபேல் தன்னை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்ததால், இருவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்ததாகவும், ஆனால் திடீரென ருபேல் திருமணம் செய்ய மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இதனிடையே செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த, நஸ்னின், திருமணத்திற்கு ருபேல் சம்மதித்தால் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் ருபேல், இக்குற்றச்சாட்டை மறுத்துவந்தார். இது ஒரு பிளாக்-மெயில் என்று கூறிவந்தார். இதனிடையே கடந்த வாரம் வங்கதேச கிரிக்கெட் வாரியம், உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான பதினைந்து வீரர்கள் பெயர் பட்டியலை அறிவித்தது. அதில் ருபேல் பெயரும் இடம் பெற்றிருந்தது. எனவே உலக கோப்பைக்கான ஆயத்த பயிற்சிகளில் ருபேல் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், அவரை கைது செய்ய டாக்கா நகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த விசாரணை வரும்வரை அவர் சிறையில்தான் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது கோர்ட். இந்த சம்பவத்தால் வங்கதேச கிரிக்கெட் அணி நிர்வாகம் திகைப்படைந்துள்ளது. 22 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ருபேல் 32 விக்கெட்டுகளையும், 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 69 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த சாதனைக்கு சொந்தக்காரர் ருபேல் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.