ராமேஸ்வரம் கோவிலில் கொடியேற்றத்துடன் மகா சிவராத்திரி திருவிழா தொடங்கியது

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

ராமேஸ்வரம், பிப். 23- ராமேஸ்வரம் கோவிலில் கொடியேற்றத்துடன் மகா சிவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது தென்னகத்து காசியாகவும், ராமபிரான் சிவனை வழிபட்ட தலமாகவும் ராமேஸ்வரம் கோவில் திகழ்ந்து வருகிறது. இங்கு ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கி வருகிற 6-ந்தேதி வரை நடக்கிறது. நேற்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மீன லக்னத்தில் கோவில் கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இரவு 8 மணிக்கு ராமநாதசுவாமி தங்க நந்திகேசுவரர் வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி வீதி உலா வந்தார்கள். வருகிற 2-ந்தேதி (புதன் கிழமை) காலை 10.30 மணிக்கு நடராஜர் கேடயத்தில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கோவில் அனுப்பு மண்டபத்தில் பட்டயம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு ஒளி வழிபாடு முடிந்ததும் சுவாமி அம்பாள் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் வீதி உலா வருகிறார்கள். 3-ந்தேதி காலை 10.45 மணிக்கு சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார்கள். தொடர்ந்து தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. 4-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். மதியம் 1 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் புறப் பாடாகி அக்னி தீர்த்த கடற்கரைக்கு வந்து அங்கு பக்தர்களுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி தினமும் கோவில் அருகே உள்ள வடக்கு நந்தவன கலையரங்கில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நேற்று காலை நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் இளங்கோ, அறங்காவலர் குழு தலைவர் ராஜா குமரன் சேதுபதி, உதவி கோட்ட பொறியாளர் மயில் வாகணன், முருகானந்தம், சூப்பிரண்டு மனோகரன் மற்றும் கோவில் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.




வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.