முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், டி.வி. பத்திரிகையாளரை மணந்தார்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பாகிஸ்தான் முன்னாள் வீரர் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் (வயது 62). தற்போது பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். இவர் 1995-ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ஜெமிமாவை திருமணம் செய்தார். 2 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில், இருவரும் 2004-ம் ஆண்டு பிரிந்து விட்டனர். சமீப காலமாக இம்ரான்கான், டி.வி. பத்திரிகையாளரான ரேஹம் (42) என்பவரை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.இந்த நிலையில் இம்ரான்கான், இஸ்லாமாபாத்தில் உள்ள தனது பானி காலா பண்ணை வீட்டில் நேற்று நடந்த எளிய விழாவில், ரேஹமை திருமணம் செய்து கொண்டார். இந்த ரேஹமும் ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு முதல் கணவர் மூலம் 3 குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது.இம்ரான்கான், ரேஹம் திருமணம் குறித்த தகவலை தெக்ரீக்&இ&இன்சாப் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷிரீன் மஜாரி டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இம்ரான்கான் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவரது சார்பில் இந்த தகவலை வெளியிடுவதாக அவர் கூறி உள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.