கருணாநிதி 11 முறையாக தி.மு.க தலைவராக தேர்வு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்தது. இதில் பங்கேற்க தி.மு.க. தலைவர் கருணாநிதி காலை 9 மணிக்கு வந்தார். பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் பொதுக்குழு கூட்டத்துக்கு வந்தனர். தமிழ்நாடு முழுவதும் இருந்து 2500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப் பினர்களும் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது.இதற்காக தேர்தல் ஆணை யராக அமைப்பு செயலாளர் சற்குணபாண்டியன் நிய மிக்கப்பட்டார். மூத்த உறுப்பினரான சற்குண பாண்டியன் பெயரை சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிர மணியன் முன்மொழிய, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி வழிமொழிந்தார். இதைத்தொடர்ந்து சற்குண பாண்டியன் மேடைக்கு வந்து தேர்தலை நடத்தினார். அப்போது கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் -கீழே அமர்ந்திருந்தனர். தி.மு.க. தலைவர் பதவிக்கு கருணாநிதி மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அவரது மனுவை 603 பேர் முன்மொழிந்தும், வழி மொழிந்தும் உள்ளதாக சற்குணபாண்டியன் அறி வித்தார். அவர் கூறுகையில், 'கருணாநிதியை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே போட்டி இல்லாமல் கருணாநிதி தி.மு.க. தலைவராக ஒருமனதாக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார் இதைத்தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பின்னர் கருணாநிதி மேடைக்கு வந்தார். பொதுச்செயலாளர் பதவிக்கு அன்பழகன் பெயரில் மட்டும் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இதை 603 பேர் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் உள்ள னர். போட்டி ஏதேனும் இல்லாததால் அன்பழகன் ஒருமனதாக பொதுச் செய லாளராக தேர்ந்தெடுக் கப்படுவதாக சற்குண பாண்டியன் அறிவித்தார். அடுத்ததாக பொருளாளர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் பெயரில் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளதாகவும் இதை 603 பேர் முன் மொழிந்தும், வழிமொழிந்தும் உள்ள தாகவும், பொருளாளர் பதவிக்கு போட்டி ஏதும் இல்லாததால் மு.க.ஸ்டாலின் மீண்டும் பொருளாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்றும் சற்குணபாண்டியன் அறி வித்தார்.இதைத்தொடர்ந்து கரவொலி கிளம்ப பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மேடைக்கு வந்தனர்.பின்னர் தணிக்கை குழு உறுப்பினர் தேர்தல் அறி விக்கப்பட்டது. காசிநாதன், குழந்தைவேலு, பலராமன், சுப.சீதாராமன் ஆகிய 4 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளனர். வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் இவர்கள் 4 பேரும் தணிக்கை குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக சற்குண பாண்டியன் அறிவித்தார். இத்துடன் எனது தேர்தல் பணி முடிந்து விட்டது என்று சற்குணபாண்டியன் கூறினார்.இதைத்தொடர்ந்து கருணாநிதி, அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு ஆளுயர மாலைகள் அணி விக்கப்பட்டன. பொதுக்குழு உறுப்பினர்கள் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பின்னர் மு.க.ஸ்டாலின் 3 சட்ட திருத்த தீர்மானத்தை கொண்டு வந்து பொதுக்குழு ஒப்புதலை பெற்றார். பின்னர் தி.மு.க. தலைவர் கருணாநிதி கட்சியின் தலைமைக் கழக நிர்வாகி களை அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:- முதன்மைச் செயலாளர் -துரைமுருகன். துணை பொதுச் செய லாளர்கள்- சற்குண பாண்டியன், வி.பி.துரைசாமி, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன். கொள்கை பரப்புச் செய லாளர்கள்- திருச்சி சிவா, ஆ.ராசா. மகளிர் அணி செயலாளர்- கனிமொழி எம்.பி. மாணவர் அணி செய லாளர்- இள.புகழேந்தி. தொழிலாளர் அணி செயலாளர்- சிங்கார ரத்தின சபாபதி. இதுதவிர பல்வேறு அணிகளின் செயலாளர்கள், இணை செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன. இவ்வாறு கருணாநிதி அறிவித் தார்.




வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.