இலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேனா வெற்றி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவின் தோல்வி என்பது உறுதியாகிவிட்டது. 50 சதவீதத்திற்கு அதிகமான ஓட்டுக்களை பெற்ற சிறிசேனா இலங்கையின் புதிய அதிபராகிறார். சிறிசேனா மாலை 6 மணிக்கு இலங்கை அதிபராக பதவியேற்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறிசேனாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களுக்கும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இலங்கை அதிபர் தேர்தலில் தனக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ததற்காக இலங்கை மக்களுக்கு மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்து உள்ளார். தனது அதிகாரபூர்வ இணைய தளத்தில் தேர்தல் முடிவு குறித்து கருத்தை வெளியிட்டிருக்கும் மைத்திரிபால சிறிசேன, " என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாக்களித்த அனைத்து இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். கருணையுடனான மைத்ரி யுகத்தை நோக்கி செல்வோம்" , என்று கூறியிருக்கிறார். சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இந்த கருத்து வெளியிடபட்டு உள்ளது
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.