தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், செய்தித் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொசு ஒழிப்பு, காய்ச்சல் தடுப்பு என இரு பிரிவுகளில், சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள், நகராட்சி அலுவலர்கள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். காய்ச்சல் அதிகமுள்ள வார்டுகளில் வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பரப்புரையை மருத்துவர்கள், அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாவட்டங்களில் காய்ச்சல் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. காய்ச்சல் என மருத்துவமனைக்கு வருவோருக்கு உடனடியாக சிகிச்சையளிக்கும்படி தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 850 மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.