கன்டோன்மென்ட் தேர்தல் அதிமுக, திமுக பிரசாரம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பரங்கிமலை கன்டோன்மென்ட் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இரண்டாவது வார்டு அதிமுக வேட்பாளர் தேன்ராஜாவை ஆதரித்து அமைச்சர் சின்னையா வாக்கு சேகரித்தார். எம்.எல்.ஏ.,க்கள் கே.பி.கந்தன், வி.என்.பி.வெங்கட்ராமன் உள்பட பலர் உடன் சென்றனர். அதே வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களான மாசீர்முகமதி, கோபாலகிருஷ்ணனும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 5வது வார்டு அதிமுக வேட்பாளர் ஆனந்த்குமாரும் வாக்கு சேகரித்தார். எம்.எல்.ஏ. வெங்கட்ராமன், தேர்தல் பொறுப்பாளர்கள் வைரமுத்து, கஜேந்திரன், முருகன் ஆகியோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர் .4வது வார்டு திமுக வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்மணி, கோல்ட் பிரகாஷ், மறைமலைநகர் திமுக செயலாளர் வி.சண்முகம், ஆலந்தூர் என்.சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் பூபாலன் உள்பட பலர் சென்றனர். 3வது வார்டு திமுக வேட்பாளர் செங்கை மோகனை ஆதரித்து மாவட்ட செய லாளர் தா.மோ.அன்பரசன் வாக்கு சேகரித்தார். தேர்தல் பொறுப்பாளர் எம்.கே.தண்டபாணி உள்பட பலர் உடன் சென்றனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.