இலங்கை அதிபர் தேர்தலில் படுதோல்வி எதிரொலி : ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாடு தப்பி ஓட்டம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு தப்பியதாக கூறப்படுகிறது. இதில் மகன்கள் சீனாவுக்கும், சகோதரர்கள் மாலத்தீவிற்கும் தப்பி சென்றனர்.இலங்கை அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும்போது ராஜபக்சே தோல்வி அடைவது தெரிந்ததும் அவரது மகன்கள் சீனாவுக்கும், தம்பியும், பாதுகாப்பு செயலருமான கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவுக்கும் தப்பியோடி விட்டதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் இரவுமுதல் வெளிவர தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே ராஜபக்சே பின்தங்கி இருந்தார். புதிதாக அமைய உள்ள அரசு, ஊழல் குறித்து விசாரணை நடத்தி கைது நடவடிக்கை எடுப்பார்கள் என தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்த கோத்தபய, தனது மனைவி அயோமாவுடன், விமானப்படை விமானம் மூலம் சிங்கப்பூருக்கு செல்ல முடிவு செய்தார். அந்நாட்டு அரசு இதற்கு அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர், மாலதீவுக்குத் தப்பிச் சென்று விட்டதாக தெரிகிறது. சிங்கப்பூர், மாலத்தீவுக்கு செல்வதற்கு கோத்தப்பய விசா பெற தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மற்றொரு சகோதரர் பசில் ராஜபக்சேவும் கோத்தபயவுடன் தப்பி இருக்கலாம் என சந்தேகிக்கப்டுகிறது. அதே நேரத்தில் ராஜபக்சேவின் மகன்கள் நமல், ரோகிதா, யோஷிதா ஆகியோர் சீனாவுக்கு தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது. இதற்கிடையே, நேற்று முன்தினம் தேர்தலில் தாம் தோல்வியடைவதை உணர்ந்த மகிந்த ராஜபக்சே, தேர்தல் முடிவுகளை ரத்துச் செய்ய முயன்றார். அவசரகால சட்டத்தை பிறப்பித்து, தேர்தல் முடிவுகளை ரத்துச் செய்வது தொடர்பான, ஆணையை தயாரிக்க சட்டத்துறை செயலரிடம், ராஜபக்சே கோரியதாகவும், ஆனால் அவர் அதற்கு மறுத்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, ராஜபக்சேவுடன் போனில் தொடர்பு கொண்ட ரணில் விக்கிரமசிங்க, அமைதியான முறையில் வெளியேறும் படியும், அதற்குரிய பாதுகாப்பு வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தார். அதன்படி, ராஜபக்சே குடும்பத்தினரை அழைத்து கொண்டு டொரிங்டன் அவென்யூவில் உள்ள, வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்கு சென்று பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு சென்றதாக கொழும்பு ரெலிகிராப் ஊடகம் தெரிவித்துள்ளது.அமைச்சர் கைதுஇலங்கை அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது சிறிசேன மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதில் கஹாவத்தை சேர்ந்த வர்த்தக சங்க செயலாளர் பலியானார். அமைச்சர் பிரேமலால் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியிருந்த பிரேமலாலை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.