ஜாவா கடல் பகுதியில் இருந்து ஏர்ஏசியா விமான வால் பகுதி மீட்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

இந்தோனேஷியா நாட்டின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு கடந்த 28-ந் தேதி 162 பேருடன் புறப்பட்டு சென்ற ஏர்ஏசியா விமானம், சிறிது நேரத்திலேயே மாயமானது. அந்த விமானம், ஜாவா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அந்த விமானத்தின் சிதைவுகளை தேடி கண்டுபிடிக்கும் பணி கடந்த இரு வாரங்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அந்த விமானத்தின் வால்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. இதை ஏர்ஏசியா குழுமத்தின் தலைமை நிர்வாகி டோனி பெர்னாண்ட்ஸ், டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட செய்தியில் உறுதி செய்திருந்தார். வால் பகுதி மீட்பு இந்நிலையில், ஏர்ஏசியா விமான வால் பகுதியை இந்தோனேஷிய நாட்டின் புலனாய்வு பிரிவின் தேடுதல் குழுவினர் ஜாவா கடல் பகுதியில் இருந்து வெளியே எடுத்துள்ளனர். இது 30 மீட்டர்கள் ஆழத்தில் இருந்துள்ளது. கிரேன் உதவியுடன் வால் பகுதி மேலே எடுக்கப்பட்டு மீட்பு கப்பலுக்கு அது கொண்டு செல்லப்பட்டது. வால் பகுதியின் உள்ளே விமானிகள் குரல் பதிவு கருவிகள் மற்றும் விமானத்தின் ஆவண பதிவு கருவிகள் ஆகியவை இருக்கிறதா? அல்லது விமானம் விபத்திற்குள்ளானதில் அவை தனியாக பிரிந்து போய் விட்டதா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. இயக்குநர் பேட்டி இது குறித்து தேசிய தேடுதல் மற்றும் மீட்பு கழகத்தின் இயக்குநர் எஸ்.பி. சுப்ரியாடி கூறும்போது, எங்களது குழுவினர் நேறிரவு வால் பகுதியின் கதவை திறந்து உள்ளே பார்த்தனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். விமான பதிவு கருவிகளில் இருந்து பிங்ஸ் எனப்படும் சிக்னல்கள் வெளியிடப்படுகிறதா? என மீட்பு குழுவினர் கடலுக்குள் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். விமானத்தின் பின்பகுதியில் இருந்து கருப்பு பெட்டி தனியாக உடைந்து சென்று இருக்க கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிபுணர்கள் கருத்து இந்த தேடுதல் பணியில் இந்தோனேஷியாவின் தேசிய தேடுதல் மற்றும் மீட்பு கழகம், ராணுவம், போலீஸ் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து ஈடுபட்டுள்ளன. இதுவரை 48 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள உடல்கள் சிதைந்த விமானத்தின் உள்ளே இருக்க கூடும் என தேடுதல் குழுவினர் நம்புகின்றனர். விபத்தில் மீட்கப்பட்ட உடல்களை பிரேத பரிசோதனை செய்ததில் தீ காயம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. எனவே, தீ விபத்து அல்லது வெடித்து சிதறியதற்கான வாய்ப்பு எதுவும் நடக்கவில்லை என்பதனையே இது தெளிவுபடுத்துகிறது என்று விமான பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். விமானம் நீருக்குள் தாழ பறந்து விழுந்திருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.